ஐ.ஜே.கே. கட்சி தலைவரும், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் வேந்தருமான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பச்சமுத்து - மோகன்குமார்
பச்சமுத்து – மோகன்குமார்

புகார் கொடுத்த பைனான்சியர் மோகன் குமாரிடம் பேசியபோது, “கடந்த 2004ம் வருடம், என்னிடமிருந்து 70 லட்ச ரூபாயை எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவே்தர் கடனாக வாங்கினார். ஆனால் இன்றுவரை பணத்தை திருப்பித்தரவில்லை. இது குறித்து பேச அவரை சந்திக்கலாம் என்றாலும் முடியவில்லை. ஆகவே வேறு வழியின்றி அவர் மீது புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.