சென்னை: காவல் துறையினர் அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும்” என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபி ஜே.கே. திரிபாதி ஜூன் 30ந்தேதி ஓய்வுபெற்ற நிலையில், புதிய  டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் தேர்வு செய்யப்பட்டார். இ‘வர்  1987ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. காவல்துறையில் பல்வேறு பதவிகளையும்,  குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர். ஐபிஎல் மட்டுமின்றி  எம்.எஸ்.சி, எம்.பி.ஏ, பி.ஹெச்.டியையும், சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்தவர்.

இவர் டிஜிபியாக பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடுத்த நடவடிக்கையாக காவல்துறையினர் பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவல்துறையினர் பேருந்து, கைதிகளை அழைத்துச்செல்லுதல், வாரண்ட் தொடர்பான பணிகள் உள்பட துறை சார்ந்த பணிகள் தவிர்த்து,  ‘ சொந்த தேவைக்காக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.‘