சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய கொரோனா பாதிப்புகளில் 75% தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்றும்  என்று அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிரட்டி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு என்று உலக சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்று சிங்கப்பூர் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சிங்கப்பூர் நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வின்படி,

அங்கு கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்,  ஆனால் அவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படவில்லை என்று தெரிவித்து உள்ளது. இதனால் தடுப்பூசி மட்டுமே  கொரோனா பரவுவதை நிறுத்த போதுமானதாக இருக்காது என்றும் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  கடந்த 28 நாட்களில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 1,096 பேரில், 484, அல்லது சுமார் 44% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள். அதே நேரத்தில் 30% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி  எடுத்துக்கொண்டவர்கள், என்றம்  25% க்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் என்று தெரிவித்து உள்ளது.

இவர்களில் நோய் தொற்றால் கடுமைக பாதிக்கப்பட்ட 7 பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்பட்டதாகவும் ஒரே ஒருவர் மட்டும்  தீவிர சிகிச்சையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்,  இந்த 8 பேரில் ஒருவர் கூட முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்றும்சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்படும்போது தடுப்பூசி தீவிர நோயைத் தடுக்க உதவுகிறது என்பதற்கு தொடர்ச்சியான சான்றுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளதுடன், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, கொரோனாவல்  பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே காணப்படுகிறது.  இதனால், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகள் தடுப்பூசிகள் பயனற்றவை என்று அர்த்தமல்ல, என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக  சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யூஎஸ்) சா ஸ்வீ ஹாக் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் டீன் தியோ யிக் யிங் தெரிவித்து  உள்ளது.

‘சிங்கப்பூர்  விரைவில்  100% முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விகிதத்தை அடைகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளவர், சிங்கப்பூர் ஏற்கனவே அதன் 5.7 மில்லியன் மக்களில் 75% பேருக்கு  தடுப்பூசி போட்டுள்ளது, இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்குப் பிறகு உலகின் இரண்டாவது அதிகபட்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசு, தனது தேசிய தடுப்பூசி திட்டத்தில் ஃபைசர் மற்றும் மாடர்னா (எம்.ஆர்.என்.ஏ.ஓ) தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது. அங்கு இன்று 130 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  சமீபத்திய  கொரோனா அதிகரிப்பு, காரணமாக அங்கு தடுப்பூசிகளை வயதானவர்களிடையே அதிகரிப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், =சமூகக் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகளைத் தூண்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஃபைசர் (PFE.N) -BioNTech (22UAy.DE) அல்லது AstraZeneca (AZN.L) ஆகியவற்றிலிருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், டெல்டா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.