சென்னை: நாடு முழுவதும் இன்று காவலர் வீரவணக்கா நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பணியின்போது வீரமணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஆண்டுதோறும் அக்டோபர் 21ந்தேதி “காவலர் வீரவணக்க நாள்” அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்த்நது,. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Patrikai.com official YouTube Channel