வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

Must read

சென்னை:
ருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்தபோது வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

More articles

Latest article