ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிகள் நாகராஜ், பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தப்பிக்க முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவருக்கும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயம். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel