கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு….!

Must read

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் (வயது 21).

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நேற்றிரவு 11.45 மணியளவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற டாடா ஹேரியர் கார், நிலைதடுமாறி செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 279, 337, 304 என மூன்று பிரிவின்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த பவானிதேவியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article