நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் : தோழி மரணம்

Must read

மாமல்லபுரம்

மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து உடன் பயணித்த அவர் தோழி உயிர் இழந்துள்ளார்.

மாமல்லபுரம் அருகே உள்ள சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு ஒரு கர் படுவேகமாக வந்துள்ளது.     அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது.

அதே சாலையில் சென்ற சிலர் அதைக் கண்டு அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   அதில் பயணித்த பிக் பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார்.  அவரது இரு ஆண் நண்பர்களும் படுகாயம் அடைந்து அவர்களும் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களுடன் பயணம் செய்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் விபத்து நடந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.  ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிவதாகத் தெரிய வந்துள்ளது.   இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விபத்து மது போதையில் வேகமாக கார் ஓட்டியதால் ஏற்பட்டிருக்கலாம் என மாமல்லபுரம் காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article