சல்யூட்: பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் ஓய்வு!

Must read

சென்னை:

மிழகத்தை மிரட்டி வந்த  பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய ஐபிஎஸ் அதிகாரி யான  டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவரது தீரச்செயலைக் கருவாகக்கொண்டே, நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் தயாரிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எஸ்.ஆர். ஜாங்கிட், ஐ.பி.எஸ் அதிகாரியாக 1985-ல் தேர்வு பெற்று, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி. யாக பொறுப்பேற்றார். சுமார்  35 ஆண்டுகளாக தமிழக காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்று ஒய்வு பெறுகிறார்.

1990ம் ஆண்டுவாக்கில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்  போன்ற தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம்  வெடித்தபோது, துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக, ஜாங்கிட் பணியமர்த்தப் பட்டார். அவர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஜாதிக்கலவரம் ஒடுக்கப்பட்டு, ஜாதித் தலைவர் களின் சிலைகளுக்கு இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டு, ஜாதித் தலைவர்களின் சிலைகள் பாதுகாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து,   மதுரை, நெல்லை, தஞ்சாவூர் சரகங்களில் டி.ஐ.ஜி.,யாகவும், நெல்லை, மதுரை மாநகரங்களில் கமிஷனராகவும் ஜாங்கிட் பணிபுரிந்துள்ளார்.

இவர் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்தபோது, வட மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கும்பலின் அட்டகாசம் தமிழகத்தில் தலைவிரித்தாடியது. இந்த கொள்ளைக்கும்பலால், திமுகவைச் சேர்ந்த  கும்மிடிப்பூண்டி, எம்எல்ஏ  சுதர்சன் கடந்த 2001ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அந்த கொள்ளைக்கும்பலை வேட்டையாட, ஜாக்கிட் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தேடி வந்தனர். பல மாதங்கள் ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் முகாமிட்டு, அந்தக்கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 13 பேரைஅதிரடியாக ஒழித்துக்கட்டி சாகம் செய்தவர்

இவரின் இந்த வீரதீரச் செயலை மையப்படுத்தி தான்  தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் திரைப்படம் படம் வெளியானது.

துப்பாக்கி சுடுவதில் வல்லவரான ஜாங்கிட் சென்னையில் பணியாற்றியபோதுதான், மாநகரை பயமுறுத்தி வந்த  பிரபல ரவுடிகளான  வெள்ளை ரவி, பங்க் குமார்  போன்ற ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். தமிழக காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் விருது, ஜனாதிபதி விருது என பல்வேறு விருதுகளை அள்ளியவ இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

திமுக ஆதரவாளராக கருதப்பட்ட ஜாக்கிட்டை அதிமுக அரசு ஒதுக்கி வைத்த நிலையில், அவரை  போக்குவரத்துக் கழக விஜிலன்ஸ் அதிகாரியாக நியமித்து பழிவாங்கியது.

தமிழகத்தில் ஐபிஎல் அதிகாரிகளை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் அல்லாத அதிகாரிகளை உயர் பதவியில் நியமிக்கப்படுவதை கடுமையாக சாடினார்.  பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தின்போது பாண்டியராஜன் போன்ற காவலர்களின் நடவடிக்கை குறித்தும்  ஜாங்கிட் விமர்சனம் செய்திருந் தார்.

ஆனால், அப்போது  டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், ஆளும் அரசுக்கு ஆதரவாக தனது விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில்,  ஜாக்கிட்டை கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் ஜாக்கிட் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

திறமையான அதிகாரியான ஜாங்கிட்டுக்கு பத்திரிகை.காம் ‘சல்யூட்’ அடிப்பதில் பெருமை கொள்கிறது.

More articles

Latest article