சென்னை
சென்னை நகரில் ஊரடங்கு குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அனைத்துக் கடைகளும் பகல் 12 மணி முதல் அடைக்கப்பட்ட பிறகும் மக்கள் அதிக அளவில் நடமாடுவதைக் காண முடிகிறது. இதனால் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடத்தினார். இதில் பல துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சென்னை நகரில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது
இது குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னை நகரில் ஊரடங்கு முறையாகக் கண்காணிக்கப்படவில்லை. இது மிகவும் அதிருப்தி அளிக்கிறது. பொதுமக்கள் நாளை முதல் கண்காணிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.