சட்டபேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை விவாதம்

Must read

சென்னை:
மிழ்நாடு சட்டப் பேரவையில்,காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர் மே 10 ஆம் தேதி வரை 22 நாள்கள் நடைபெறவுள்ளன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

இன்றைய கூட்டத்தில், விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article