இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிகள் ஸ்டிரைக் நடத்தியதை அடுத்து எப்போதும் எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னனி தலைவர் ராஜா பரூக் ஹைதர் தனது அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

raja_farooq_haider

இஸ்லாமாபாத்தில் உள்ள காஷ்மீர் ஹவுசில் அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில் ராஜா பரூக் ஹைதர் பேசுகையில்,
இதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு பாகிஸ்தான் உதவ தயாராக இருப்பதாக பிரதமர் நவாஸ் செரீஃப் வாக்களித்திருப்பதாக கூறிய ஹைதர் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு அரசு தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்யும் என்று கூறினார்.
அவசர காலங்களில் மக்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்புக்காக இடம்பெயர்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் குறைந்தது குழந்தைகளையும் பெண்களை மட்டுமாவது அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இடம் பெயர்ந்தவர்களுக்கு கூடாரம், கம்பளி போன்ற அத்தியாவசிய தேவைகளை சந்திப்பதில் கவனம் செலுத்துமாறு மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.