சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுத்தும் சீன பாகிஸ்தான் எகனாமிக் கோரிடார் (CPEC) என்ற பிரம்மாண்ட திட்டத்தில் தானும் இணைய ரஷ்யா விருப்பம் தெரிவிப்பதை அடுத்து அதை வரவேற்கும் வகையில் பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு தனது க்வாடார் துறைமுகத்தை திறந்து கொடுத்துள்ளது.

gwadar1

இந்த துறைமுகத்தை ஏற்கனவே ஈரான் மற்றும் துர்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா CPEC இணைய விரும்பும் முடிவை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தில் இணைய விரும்புவதாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், “இந்த பிரம்மாண்ட திட்டத்தால் உலகத்தின் பாதி மக்கள் பயனடைவார்கள்” என்று தெரிவித்தார்.

gwadar2

மேலும், இத்திட்டத்தின் படி துர்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பதிக்கப்படும் என்றும், தெற்காசியாவை மத்திய ஆசியாவுடன் இணைக்கும் 1,680 கி.மீ நீளமுள்ள கேஸ் குழாய் பதிப்பது மூலம் உலகின் பாதி மக்கள் பயனடைவார்கள் என்றும் நவாஸ் ஷ்ரீஃப் தெரிவித்தார். இந்த புதிய வர்த்தக உறவின் மூலம் பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் உறவு மேலும் வலுப்படும் என்று தெரிகிறது.