சென்னை:

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது என ஜெ. தீபா தெரிவித்துள்ளார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும். போயஸ் கார்டன் இல்லம் நினைட என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெ. தீபா செய்தியார்களிடம் கூறுகையில், ‘‘ போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது. முதல்வர் போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்றுவதாக அறிவித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நீதி விசாரணை வேண்டும் என்பது கபட நாடகம்.

சரியான விசாரணை நடக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு தலையிட்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்’’ என்றார்.