டெல்லி: பிரதமரின்  தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆனால், இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்தியஅரசு உண்மையை மூடி மறைக்கிறது என  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது, விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டம் வாபஸ் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், மத்திய பாஜக அரசின் அடாவடிதனத்தை கடுமையாக விமர்சித்தார்.

விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்மொழிகிறதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது , ஆனால், இந்த விவகாரத்தில் விவசாய அமைச்சகத்திடம் எந்த பதிவும் இல்லை, எனவே கேள்வி எழவில்லை என்று தான்தோன்றித்தனமாக அமைச்சகம் பதிலளிக்கிறது என்று விமர்சித்தார்.

விவசாய போராட்டத்தில் உயிரிழந்த 403 பேருக்கு, பஞ்சாப் அரசு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது மற்றும் 152 பேருக்கு வேலை வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து 100 பெயர்களின் பட்டியல் மற்றும் 3வது பட்டியலையும் எங்களிடம் உள்ளது, இது எளிதில் சரிபார்க்கக்கூடிய பெயர்களின் பொதுத் தகவலாகும். ஆனால் அப்படிப்பட்ட பட்டியல் இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது.

விவசாய சட்டம் வாபஸ் பெறுவது குறித்து கூறிய  பிரதமர் தான் தவறு செய்துவிட்டதாக கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரதமரின்  தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது நீங்கள் அவர்களின் யார் என தெரியாது என்று  பொய் சொல்கிறீர்கள். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், அவர்களுக்கு வேண்டியதை கொடுக்க உங்களுக்கு ஏன் கண்ணியம் இல்லை?

கொரோனா தடுப்பூசி உத்தி பற்றி நாம் தெளிவாக நினைக்கிறோம், தற்போதைய தடுப்பூசிகள் ஒமிக்ரான்  மாறுபாட்டுடன் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நான் கேள்விப்படுகிறேன். நாம் எப்படி தடுப்பூசி போடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் புதிய பூஸ்டர் மூலம் அனைவருக்கும் மீண்டும் தடுப்பூசி போட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.