சென்னை:

திமுக பாமக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவில் இருந்து விலகியபாமக இளைஞர் அணி செயலாளர்  ராஜேஸ்வரி, இன்று மக்கள் நீதி மய்யம்  கட்சித்தலைவர்  கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அவர் விரைவில் கமல்ஹாசனின் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி சேர மாட்டோம் என்று திமுக, அதிமுக காட்சிகளை மிகவும்  கடுமையான வார்த்தைகளால்  விமர்சித்து வந்த டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பாமகவினர், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். பாமகவுக்கு 7+1=8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக திடீரென  தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அவரது கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் மட்டுமல்லாத மக்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாமக மீது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பாமக இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஸ்வரி, அதிமுக பாமக கூட்டணி காரணமாக, பாமகவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து கூறிய ராகேஸ்வரி, பா.ம.க அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன் என்றும்,  ‘என்னுடைய தைரியமானஇந்த முடிவை பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அண்ணன் சீமான் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி  அனுப்பியிருந்தார். சகோதரர் தினகரன் தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்தன. அதேபோல்தான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஹாசன் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று அழ்வார்பேட்டை உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு சென்ற ராஜேஸ்வரி, கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜேஸ்வரி விரைவில் மக்கள் நீதி மய்யத்தில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.