சென்னை: பாமகவின் பெண்கள் அமைப்பான பசுமைத்தாயகம் சார்பில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த ஒட்டத்தில் பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ளதாக தெரிவித்து உள்ளர்.

கடந்த 1997 இல் பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அன்புமணி ராமதாஸ் தற்போது பாமக வின் தலைவராக இருந்து வருகிறார். . சுமார் 7 ஆண்டுகள் பசுமைத்தாயகம் அமைப்பின்  பொறுப்பை அலங்கரித்தபோது, மாநிலம்  முழுவதும் ஏரி, குளங்களை தூர்வாருவதில் ஆர்வம் காட்டப்பட்டது. மேலும், 25 லட்சம் மரக் கன்றுகளையும் பசுமைத்தாயகம் அமைப்பு நட்டது.

பசுமைத்தாயகம் அமைப்பு அன்புமணி தலைமையில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கீகாரமும் கிடைக்க செய்தார். அதேபோல ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராகவும் ஆக்கினார். இலங்கை தமிழர்களுக்காக ஜெனிவாவில் 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். பின்னர் அவர் மத்திய அமைச்சராக பதவி ஏற்றபோது, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவராக தனது மனைவியை அறிவித்தார். தற்போது பசுமை தாயகம் அமைப்பை சவுமியா அன்புமணி நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பு மூலம் காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள, காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தி, போர்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் காலநிலை செயல்பாட்டுக்கான சென்னை ஓட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.