பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
82 வயதாவும் மருத்துவர் ராமதாஸ் இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பா.ம.க. தலைவர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
1. நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.#COVID19
— Dr S RAMADOSS (@drramadoss) July 13, 2022
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.