டெல்லி: ராமர்கோவில் கும்பாபிஷேம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில்,  இன்றைய பூஜையில், மோடியின் ‘பிரதமர்’ அந்தஸ்து ஜீரோதான் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அயோத்தியில் இன்று ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 10ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து அவ்வப்போது வசை பாடி வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இன்று தனது எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோடியின் பிரதமர் அந்தஸ்து ஜீரோ என விமர்சனம் செய்துள்ளார்.

அவரது பதிவில், அயோத்தி ராமர் கோவில் பூஜையில், மோடியின் ‘பிரதமர்’ என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான். அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரை பின்பற்றியது இல்லை. குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராக நடக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.