சென்னை:  தமிழ்நாட்டின், இறுதி வாக்காளர் பட்டியலை சத்தியபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,18,90,348  பேர் உள்ளனர்.  மேலும், 93 கூடுதல் பணியிடங்களுக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கி இருப்பதாக வும் தெரிவித்தார்

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும் அந்த வகையில், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ளலாம். அந்த வகையில், 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (22.01.2024) தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகவால் வெளியிடப்பட்டது.

அதன்படி,  இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை  6,18,90,348  ஆக உள்ளது. இவர்களில், ஆண் வாக்காளர்கள் 3,03,96,330; பெண் வாக்காளர்கள் 3.14.85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற வாக்காளர் முகாம் மூலம்,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13,88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13.61,888 விண்ணப்பங்கள் (ஆண்கள் 6,17,623; பெண்கள் 7.43.803; மூன்றாம் பாலினத்தவர் 462) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி,  தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தொட்ர்ந்து வருகிறது.    கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,30,522 பெண்கள் 3,29,783; மூன்றாம் பாலினத்தவர் 114) .

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,140 ஆவர். (ஆண்கள் 84,702; பெண்கள் 87,435; மூன்றாம் பாலினத்தவர் 3).

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர்,  வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர் விடுபட்டவர்களுக்கு  மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.  பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.

மேலும்,  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும் என்பதால், தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவில், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும். இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..