சென்னை: பிரதமர் மோடி இன்று கல்பாக்கத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில்,, ன்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டிரோன்கள் பறக்க தடைவிக்கப்பட்டும், பல பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ர் பிரதமர் மோடி. கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று சென்னை வருகை தருகிறார். இந்தாண்டில் 4வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார். இன்று மாலை கல்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அணுஉலையை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறா.
பிரதமர் சென்னை வருகை – 5 அடுக்கு பாதுகாப்பு பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தை சிறப்பு பாதுகாப்புப் படையினர் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள். உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு ஏற்றாற்போல் பயணத்தை திட்டமிட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி, பொதுக்கூட்டம் நடைபெறும் அதை சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பைக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளஐ தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாளை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சாலை தடை செய்யப்பட்டுள்ளது. * மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை * இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு * மவுண்ட் பூவிருந்தவல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை. * அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு * விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை(கிண்டி) * அண்ணா சிலை முதல் மவுண்ட் சாலை வரை. * தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை. எனவே வாகன ஓட்டுகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.