சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி  உரையாற்றுகிறார்.,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களே வாக்குப்பதிவுக்கு உள்ளது. இதனால், இறுதிக்கட்ட தேர்தல் நடைமுறைகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது.  இந்த நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.

தாராபுரம் தனித்தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜக தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.  இந்த பிரசார கூட்டத்தில் பிரதமருடன், முதலவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்‘வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.  அங்கிருந்து கேரளாவின் பாலக்காடு செல்லும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் தாராபுரத்துக்கு ஹெலிகாப்டரின் வரும் பிரதமர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். 1.40 மணிக்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவை விமானநிலையத்திற்கு செல்கிறார். பின்னர். அங்கிருந்து புதுச்சேரி செல்லும் பிரதமர்,  புதுச்சேரி- கடலூர் ரோட்டில் உள்ள ஏஎப்டி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்  கலந்து கொண்டு, வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.