குருவாயூர்

பாஜக நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கேரளா வருகிறார்..

கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  தற்போது மீண்டும் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாகக்  கேரளாவுக்கு வருகை தர உள்ளார்.

டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் 16 ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வருகிறார். அன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்ற பிறகு இரவில் கொச்சியில் ஓய்வெடுக்கிறார்.

வரும்17 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் பாஜக பிரமுகரும், நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமண நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்கிறார்.

பிறகு அவர் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிரதமரின் வருகையையொட்டி கொச்சி மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வரும் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிரதமர் வருகையையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள்  பிரதமர் மோடி வழிபாடு நடத்தி விட்டு சென்ற பின்னரே அனுமதிக்கப்பட உள்ள்னர். அங்கிருந்துபிரதமர் மோடி கொச்சி சென்று  விமானத்தில் டில்லிக்கு  திரும்புகிறார்.