நியூயார்க்: உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடத்தில் உள்ளார்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகபட்சமாக 76%  மதிப்பீடு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு 37 சதவீத அங்கீகாரமும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 31 சதவீதமும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 25 சதவீதமும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெறும் 24 சதவீதமும் அங்கீகாரம் பெற்றுள்ளனர்

உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட்டின் சமீபத்தில் வெளியிட்டுள்ள  ஆய்வு அறிக்கையின்படி, அதிக ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்ட உலகளாவிய தலைவர்  பட்டியலில் 76 சதவிகித மதிப்பீடு பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களின் விருப்பமான தேர்வாகத் தொடர்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரதமர் மோடியின் ஒப்புதல் மதிப்பீடு 76 சதவீதமாக உள்ளது. பிரதமர் மோடி கடந்த பல ஆண்டுகளாக 75-80 சதவீதத்திற்கு இடையே தனது ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்டு பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.  தற்போது மீண்டும்  தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 

மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 66 சதவீத மதிப்பீட்டில் இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்தின் அலைன் பெர்செட் 58 சதவீத மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

 அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் இடம் பெறவில்லை. நான்காவது இடத்தில் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா 49% மதிப்பீட்டிலும், ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 47% மதிப்பீட்டிலும் உள்ளனர். ஆறாவது இடத்தில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி 41% ஒப்புதல் மதிப்பீடுகளுடன் உள்ளார்.

40% க்கும் குறைவான ஒப்புதல் மதிப்பீடுகளுடன் பட்டியலில் உள்ள மற்ற உலகத் தலைவர்கள் ஜோ பிடன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரிஷி சுனக், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்.

 சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம், நாட்டில் உள்ள வாக்காளர்களின் பிரபலமான தேர்வாக பிரதமர் மோடி தொடர்ந்து இருக்கிறார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

பிரதமர் மோடி பற்றிய உலகளாவிய கருத்து வலுவாக உள்ளது என்பதையும் இது குறிக்கிறது. இந்தியத் தலைவரை மிரட்டவோ அல்லது இந்தியாவின் நலனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தவோ முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியைப் பாராட்டியதன் மூலம் இது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.