டெல்லி: வரும் 8 ம் தேதி பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை, நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். வீடியோ கான்பரன்சிங் முறையில் நடக்கும் இந்த கூட்டத்தை நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

கூட்டத்தில் நிதி ஆயோக் துணைதலைவர் ராஜிவ் குமார், சிஇஓ அமிதாப் காந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தொடர்பாக கருத்துகளை பிரதமர் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.