ஜப்பானில் அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்தும் மோடி

Must read

டோக்கியோ

ப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மோடி அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்.  அவர் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். டில்லியில் இருந்து தனி விமானத்தில் டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை ஜப்பான் அமைச்சர்கள் வரவேற்றனர். மேலு, ஜப்பான் வாழ் இந்திய மக்களும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி ஜப்பானில் நடைபெறவிருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் 2-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.   மோடி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “நான் இந்தியா, ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதை  ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். இந்த பயணம் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க நல்ல வாய்ப்பாக அமையும்.

மேலும் குவாட் மாநாட்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளேன்.   தவிர அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தவ உள்ளேன்” என மோடி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article