இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சீன அதிபருக்கு, மாமல்லபுரத்தில் நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை நினைவுப் பரிசுகளாக பிரதமர் மோடி வழங்கினார்.

 

இரு நாட்டுக்கும் இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங், இன்று மாலை சென்னை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து மாமல்லபுரம் வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். பின்னர், பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் நாட்டிய கச்சேரி உட்பட கலை நிகழ்ச்சிகளை சீன அதிபர் ஷி ஜின்பிங் கண்டுகளித்தார்.

கலை நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை, சீன அதிபருக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசுகளாக வழங்கினார்.