தமிழக அரசின் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலாண் இயக்குநராக ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்தியகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசின் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலான் இயக்குநராக திரு. சத்தியகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படுகிறார். சத்தியகோபால் அவர்கள் பொறுப்பேற்ற தினத்தில் இருந்து 1 வருட காலத்திற்கு, இப்பணியில் நீடிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சத்தியகோபால், சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.