லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தில் 2 நாட்கள் டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோகர் அஜித்தோவல், உ.பி. முதல்வர் யோகி உள்பட உயர்அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் கலந்துகொண்டுள்ளார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த டிஜிபிக்கள் மற்றும் மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் கலந்துகொள்ளும் 56-வது மாநாடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள உ.பி. காவல்துறை தலைமையகத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாடு இன்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் அஜித்தோவல் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில், பயங்கரவாத தாக்குதல், போதைப் பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள், சைபர் கிரைம், தீவிரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் வளர்ந்து வரும் போக்குகள் போன்ற தேசிய பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
லக்னோவில் நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது! பிரியங்கா காந்தி