டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து சரிந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்குச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை நேற்று உடைந்ததது. அதன் எதிரொலியாக திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 153க்கும் மேற்பட்டோரின் நிலை குறித்து தெரிய வில்லை.

இது வரை 10 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன, 27 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். இந் நிலையில் உத்தரகாண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

உத்தராகண்ட் அரசு சமோலியில் வெள்ள மீட்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூ.20 கோடியை விடுவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.