சோலாப்பூர்

பாஜக பிரமுகர் ஒருவர் மீது சிவசேனா கட்சியினர் கறுப்பு மை ஊற்றித் தாக்கி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் வெகுநாட்களாகக் கூட்டணி வைத்திருந்தன.  சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் அந்த கூட்டணி தொடர்ந்தது.   ஆனால் தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் பதவியை சிவசேனாவுடன் பகிர்ந்து கொள்ள பாஜக மறுத்தது.

இதனால் கூட்டணி உடைந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைத்தன.   அப்போது முதல் பாஜகவினர் சிவசேனா கட்சி மற்றும் அதன் தலைவர்கள் குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

அவ்வகையில் முதல்வர் உத்தவ் தாகக்ரே குறித்து சோலாப்பூர் நகரைச் சேர்ந்த ஷிரிஷ் கடேகர் என்னும் பாஜக பிரமுகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இதையொட்டி சிவசேனா தொண்டர்கள் ஆத்திரம் அடைந்து அவர் மீது கறுப்பு மை ஊற்றி சாலையில் ஊர்வலாமக் இழுத்து வந்துள்ளனர்.

அத்துடன் அவருக்கு வலுக்கட்டாயமாகப் புடவை கட்டி உள்ளனர்.  இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.,  அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 17 சிவசேனா தொண்டர்களைக் கைது செய்துள்ளனர்.