டில்லி

பிரதமர் மோடி ஒடிசா ரயில் விபத்து குறித்து தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஒடிசா மாநிலத்தில் இரு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.  இந்த விபத்தில் சுமார் 230 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நூற்றுக் கணக்கனோர் படுகாயம் அடைந்துள்ளனர்.   மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிரதமர்  ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோடி தனது டிவிட்டரில்

“ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். ரயில்வே அமைச்சரிடம் பேசி நிலைமையைக் கேட்டறிந்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன ”

என பதிந்துள்ளார்.