புதுடெல்லி:
உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

உக்ரைனில் நடந்து வரும் மோதலின் பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் நிலவும் உலகளாவிய சூழ்நிலையை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும், மற்ற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Patrikai.com official YouTube Channel