டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாதொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு PM Cares என்ற பெயரில் நிதி அமைப்பை தொடங்கி, பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நிதி பெற்று வருகிறது. இந்த நிதியில் இருந்து அவ்வப்போது சில அத்தியாவசிய செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், கொரோனாவால் தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நிதியானது, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். என்றும், அந்த குழந்தைகள் 23 வயதை அடைந்ததும் PM Caresல் இருத்து ரூ.10 லட்சம் அளிக்கப்படும்
மேலும், அத்தகைய அனாதைகளுக்கு இலவச கல்வி மற்றும் ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் ரூ.5 லட்சம் இலவச சுகாதார காப்பீடு செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அந்த குழந்தை 18 வயதில் நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் அந்த குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.