டில்லி

மிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்திக்கப் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதா ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைப் போல் தூத்துக்குடி மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார். அதன் அடிப்படையில் முதல்வர் மு.க ஸ்டாலினைச் சந்திக்கப் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கினார். நாளை பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க உள்ளார்

முதல்வர் ம் க ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நிவாரண நிதி வழங்கிடப் பிரதமர்  மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிகிறது. நாளைய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி சென்றுள்ளார்.