சென்னை: தமிழகஅரசுக்கு ஒத்துழையுங்கள் என கேரள அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் நீருபூத்த நெருப்புபோல தகித்துக்கொண்டிருக்கிறது. அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பையும், மத்தியஅரசின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் கேரள மாநில அரசு தான்தோன்றித்தனமாக செயல் பட்டு வருகிறது. ஆனால், தமிழகஅரசு, கேரள மாநில அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், மத்தியநீர் வளத்துறை அமைச்சக இணை செயலாளர் சஞ்சய் அவஸ்தி கேரள மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,  பேபி அணையை வலுப்படுத்த தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கைக்கு, கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும். அணை பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]