நெட்டிசன்:
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் – அலுவலகத்தில் ரெய்டு நடத்துவது பற்றியோ.. அவர் தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியோ நாம் எந்த வித விமர்சனம் செய்யவில்லை.
ஆனால் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்கின்றது. தமிழ்நாடு காவல் துறை இருக்கும் போது…
ரெய்டு நடத்தும் இடத்தில் துணை ராணுவப்படையை கொண்டு வந்து நிறுத்தியது, ஏன்.? எதற்காக..! அப்படியென்றால் அந்த ரெய்டு நடத்தும் இடங்களுக்கு தமிழக காவல் துறையால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கருதியது ஏன்.?
ஆக மாநில சுயாட்சி என்று குரல் கொடுத்த தி.மு.க. இதனை கண்டிக்கவில்லை. மற்றகட்சிகளும் வாய் திறக்காமல்இருக்கிறார்கள்.
இன்று இது போல் துணை ராணுவப் படையை கொண்டு வந்து நிறுத்தி அச்சுறுத்திய செயல் வரும் காலங்களில் இது கருப்பு புள்ளியாக இருக்கும்…
இனி யாரும் மாநில சுயாட்சி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்… வாய்ச்சவடால் வீரர்களே…
-கோவிந்தராஜன், பென்னாடம்