லதா ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியில் 6 மாதமாக ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை!

Must read


நெட்டிசன்: 
நடிகர் திரு.ரஜினி அவர்களின் மனைவியும், திரு.தனுஷ் அவர்களின் மாமியாருமாகிய லதா அவர்கள் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
அதற்கு காரணம் government demonetisation move & former chief minister’s sudden demise என்று வந்தனா (senior advisor, The Ashram School) தெரிவித்துள்ளார். இதுக்கு பெயர் தான் முட்டு கொடுத்தல்
சென்ற ஆண்டும் இதே நிலை, ஆனால் இந்த ஆண்டு நிலைமை மேலும் மோசமடைந்து உள்ளது என்றும், இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் தெரியவில்லை என K.Muralikrishnan (ஊழியராக இருக்கலாம்) என்பவர் கூறியுள்ளார்.
திருமதி. லதா விற்கு வேண்டுமானால் மாத சம்பளத்தில் குடும்பம் நடத்துபவர்களின் நிலை தெரியாமல் இருக்கலாம், ஆனால் திரு.ரஜினி அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்குமே அம்மக்களின் நிலை .
இதுவரை அதாவது சென்ற ஆண்டில் இருந்து நடந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினை செய்தித்தாளில் வெளியான பின்னரும் அவருக்கு (ரஜினிக்கு) தெரியவில்லை என்றால் இங்கு வந்து கமெண்ட்டில் முட்டு கொடுக்காமல் அவருக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே!!!
-தேஜா கஸ்தூரி(Dega Kasturi) அவர்களின் முகநூல் பதிவு:

More articles

Latest article