சென்னை: சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் ன சபாநாயகரிடம் இபிஎஸ் முறையீடு செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே சிறு மனக்கசப்பு எழுந்துள்ளதால் எடப்பாடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்தார்.
செங்கோட்டையன் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
[youtube-feed feed=1]