பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா…

Must read

சென்னை : பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையிலும் தொற்று பாதிப்பு தினசரி ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதே வேளையில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்களிடையே கொரோனா பிதி குறைந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல், ஜாதி மத பேதம் மற்றும் பணக்காரன், ஏழை என எந்தவித பாகுபாடு காட்டாமல் அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட்டைச் சேர்ந்தபிரபல நடிகர்களாகன அமிதாத், அபிசேஷக், ஐஸ்வர்யாஉள்பட பலரை பாடாய் படுத்திய  நிலையில், அமித்ஷா உள்பட பல அரசியல் தலைகளையும் மிரட்டி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா சோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், அவர், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

More articles

Latest article