டில்லி,

தொழிலாளர்களின் ஓய்வூதியமான பிஎப் வைப்பு நிதியில் நிறுவனங்களின் பங்கு தொகையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களின் சம்பளம் சிறிதளவு உயரும் என்றும் கூறியுள்ளது.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியா  பி.எஃப்.ல் நிறுவனங்களின் பங்கு வைப்பு நிதியைக் குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடிப்படை சம்பளத்தில் இருந்து தொழிலாளர் சார்பாக குறிப்பிட்ட சதவீதமும் வேலை அளிக்கும் நிறுவனங்களின் சார்பாக குறிப்பிட்ட சதவீதமும் பி.எஃப்., பென்சன், காப்பீடு உள்ளிட்டவற்றுக்காக பிடித்தம் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

இந்த விகிதத்தை மாற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது.

புனேவில் இன்று நடைபெறும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில், இருதரப்பு பங்கையும், குறைத்து பிடித்தம் போக வழங்கப்படும் சம்பளம், அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது, நிறுவனங்களின் பொறுப்பைக் குறைப்பதோடு, பொருளாதாரம் உயர வாய்ப்பு ஏற்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் கூறியுள்ளது.