புவனேஸ்வர்,

இரு மாநில உத்தரவுபடி பசுக்களை சேலத்திலிருந்து மேகாலாயாவுக்கு ரெயிலில்  கொண்டு சென்றபோது, பசுக்களுக்கு பாதுகாப்பாக சென்றவர்கள்மீது பஜ்ரங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

பின்னர் ரெயிலில் இருந்து பசுக்களை மீட்டு சென்றனர்.

கோச்சுவேலி – கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட பசுக்களை காக்க, 20 க்கும் மேற்பட்ட் பசு பாது காவலர்கள் புவனேஸ்வர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பசு பாதுகாப்புக்காக வந்த  ஊழியர்களையும் அடித்து உதைத்தனர்.

நொய்டாவில்  இயங்கி வரும் ஒரு பால்பண்ணை கம்பெனி தனது சேலம் (தமிழ்நாடு) பண்ணை யில் இருந்து மேகாலயாவில் உள்ள அம்பாடி என்னும் இடத்துக்கு மாநில அரசின் உத்தரவின் படி  20 பசுக்களை ரெயிலில் அழைத்துசென்றது.

ரெயில் புவணேஸ்வர் நிலையத்துக்கு இரவு வந்தபோது, அங்கு திரண்ட  பஜ்ரங்க்தள் தொண்டர்கள் சுமார் 25 பேர்,  பசுக்களுடன் வந்த  பாதுகாவலர்களை தாக்கினர்.

தாக்குதலுக்கு ஆளானவர்களில் ஒருவரான உமேஷ் சிங் அந்த 20 பசுக்களை ரெயிலில் இருந்து இறக்கிவிட்டு தன்னை தாறுமாறாக வந்தவர்கள் தாக்கியதாகவும், ஒரு பயணி, மற்றும் இரு ரெயில்வே ஊழியர்களையும் தாக்கியதாகவும் கூறினார்.

பஜ்ரங்தள் தொண்டர்களின் இந்த அராஜகம் ரெயில் பணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மேகாலயா அரசும் தங்கள் உத்தரவின்படியே பசுக்கள் இடமாற்றம் செய்யப் பட்டதாகவும் அறிவித்துள்ளது.

மேகாலயா அரசின் கால்நடைத்துறை இயக்குனர் டாக்டர் பி ரிஜால் அவர்களின் முதல் அமைச்சர் உத்தரவுப்படி வேளான் மக்களுக்கு பசு வழங்கும் திட்டத்துக்காக இணைய தளத்தில் மூன்று பெரும் கம்பெனிகளுக்கு டெண்டர் விடப் பட்டதாகவும், அதில் பெரிய கம்பெனியான வெர்டெக்ஸ் அக்ரோ  பி லிமிடெட் தனது சேலம் பண்ணையில் இருந்து இந்த 20 பசுக்களை அனுப்பி வைத்ததாக வும் கூறினார்.

கால்நடைகள்  பிறகு உள்ளூரில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.  பசு பாதுகாவலர்கள் மேல் ரெயில்வே போலீசார் புகார் கூறியுள்ளனர். ஆனால், போலீசாரோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.