சென்னை:

மிழக சட்டமன்றத்தில்  விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் ஓடும் கூவம் ஆறு உள்பட 3 ஆறுகளை சீரமைக்க  2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில்  மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  சென்னையில் 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என கூறினார்.

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்

ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்

ரூ.2,371 கோடியில் அடையாறு நதி  உள்பட  3 ஆறுகளை சீரமைக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்/

இவ்வாறு அவர் கூறினார்.