ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
மலைவாசஸ்தலங்களின் சுற்றுச்சூழலை பாதுகாக்கத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோடைகாலங்களில் மலைவாசஸ்தலங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை அடுத்து அந்த சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது இதனை அடுத்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்டம் நிர்வாகம் ஆய்வு செய்தது.
இதனை அடுத்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.