சென்னை

சென்னை மாநகராட்சி பள்ளிகளை ரூ.1500 க்கோடி செலவில் மேம்படுத்த திட்டமிப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சியின் 13 மேல்நிலை, 5 உயர் நிலை, ஒரு நடுநிலை மற்றும் 10 தொடக்கப் பள்ளி என்று மொத்தம் 28 பள்ளிகளில் பிரான்ஸ் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன் சிட்டீஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில், பள்ளி வளாகத்தை மேம்படுத்துவது, டிஜிட்டல் மயாக்குவது, தகவல் தொடர்பை மேம்படுத்துவது போன்ற முன்மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டு வருகிறது.

இதனால் 20,000 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.  தவிர சென்னை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த, பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பெற சென்னை மாநகராட்சி திட்டம் தீட்டி உள்ளது.

கடந்த வாரம் இது குறித்து பிரான்ஸ் நாட்டு துாதரகம் சார்பில், அந்நாட்டின் 7 நிறுவன அதிகாரிகளுடன் க ஆலோசனை நடந்த போது சிட்டீஸ் திட்டத்தில் செய்யப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  தவிர சி.எஸ்.ஆர்., எனப்படும் பெறுநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த உதவும்படி, அந்நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ளி பள்ளிகளை ரூ.1,500 கோடி செலவில் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டம் இட்டுள்ளது.  , தமிழக அரசு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை கொண்டு பள்ளிகளை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் கட்டத்தில் ரூ.92 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக 2-வது கட்டத்தில் ரூ.102 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  ரூ.50 கோடி தமிழக அரசு நிதி அளிக்கும் என்பதால் மீதத் தொகைக்கு சிஎஸ்ஆர் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு கட்டிடங்களை மேம்படுத்த ரூ. 71.57 கோடி, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த ரூ.10.11 கோடி, தொடக்க நிலை கல்விக்கு ரூ.6.46 கோடி, ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த ரூ.5.56 கோடி, விளையாட்டு உள்ளிட்ட மற்ற கல்வி சாராத பணிகளுக்கு ரூ.3.49 கோடி என்று திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இறுதியால 3-வது கட்டத்தில் ரூ.1,432 கோடிக்கு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கட்டிடங்களை மேம்படுத்த ரூ. 1,035.62 கோடி, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த ரூ.249.01 கோடி, தொடக்க நிலை கல்விக்கு ரூ.4.12 கோடி, ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்த ரூ.19.44 கோடி, விளையாட்டு உள்ளிட்ட மற்ற கல்வி சாராத பணிகளுக்கு ரூ.83.48 கோடி என்று திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.