கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார்.

பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பது இது முதல்முறையாகும்.

நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பிசாசு || பட முதல் பாடல் கார்த்திக் ராஜாவின் இசையில் “உறவின் பாட்டு” என வெளியாகிறது “உச்சந்தல ரேகையிலே” பாடல். வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி உச்சந்தல ரேகையிலே பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.