ஏர்வாடி

ஏர்வாடி தர்கா அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கும் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் நோய்க்காக வழங்கப்பட்ட மாத்திரைக்குள் ஊசி (PIN) இருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏர்வாடி தர்கா அருகே அமைந்துள்ள ஒரு சிற்றூர் இரந்துரை ஆகும். இந்த சிற்றூரில் சக்தி என்னும் நடுத்தர வயதுப் பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் ஜுரம் இருந்துள்ளது. இதை ஒட்டி அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு சக்திக்கு சிப்ரோஃப்ளாக்சாசின் என்னும் மாத்திரை ஒரு அட்டை கொடுக்கபட்டுள்ள்து. கடந்த சில நாட்களாகவே அவருக்கு வாந்தி இருந்ததால் அவர் முழு மாத்திரையை முழுங்க இயலாமல் இருந்தார். அதனால் அதை பாதியாக உடைத்து முழுங்க எண்ணி இரண்டாக உடைத்தார்.

அப்போது, அந்த மாத்திரைக்குள் ஒரு உடைந்த பின் இருந்தது கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.  இந்த தகவல் பரவவே மக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சக்தி அதன் பிறகு அனைத்து மாத்திரைகளையும் நான்காக உடைத்த பிறகே உட்கொள்ள தொடங்கினார்.

இது குறித்த தகவல் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் குமரகுருபரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவேர் உடனே விரைந்து வந்து, ‘பின்’ இருந்த மாத்திரை,  இருந்த மாத்திரை அட்டையை  கைப்பற்றினார். இது குறித்து விசாரணை செய்யப்பட்டும் என்றவர், அந்த மாத்திரையை  தமிழக அரசுக்கு வழங்கிய மருத்துவ சேவை ஆணையத்துக்கு  அனுப்பி வைத்தார்.

இந்த மாத்திரைகள் இமாசல பிரதேசம் சோலான் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்து கம்பெனியிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை வாங்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.