கொல்கத்தா

நேற்று ஏர் இந்தியா விமான எஞ்சின் பழுதடைந்ததால் விமானி கொல்கத்தாவில் அந்த விமானத்தை தரையிறக்கி உள்ளார்.

நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளது.  விமானி எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தார்.

இதைத் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். ஆயினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி திட்டமிட்ட நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.

சுமார் 5 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.