ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ்  பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கு பகிர்ந்து  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒங்வொரு ஆண்டும் மருத்துவம் , இயற்பியல், வேதியல், பொருளாதாரம் , அமைதி , இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது . அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிற  துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது .

2021 ஆம்  ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே மருத்துவம் ,இயற்பியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கும் இந்த பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது.

 அமைதிக்காகவும்,  ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கும் இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.