பிலிப்பைன்ஸ் : படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் 10 மரங்கள் நட வேண்டும்

Must read

ணிலா

டிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் தலா பத்து மரங்கள் நடவேண்டும் என்னும் சட்ட மசோதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் அதிகமாகி வருகிறது. சாலை விரிவாக்கம், நகர் விரிவாக்கம் ஆகியவைகளுக்கு மரத்தை வெட்டுவது அவசிய நடவடிக்கை ஆகிறது. அதே நேரத்தில் மரங்களை வெட்டுவதால் நாட்டின் வெப்ப நிலை மாறுதல்,மழையின்மை, பறவைகளுக்கு வசிக்க இடம் இல்லாமல் போவது ஆகியவைகள் அதிகரித்து சுற்றுச் சூழல் பாழாகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இவ்வாறு மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் அதிக அளவில் நடைபெறுகின்றன. சென்ற நூற்றாண்டுகளில் அந்நாட்டில் 70% ஆக குறைந்த மரங்களின் எண்ணிக்கை தற்போது மேலும் 20% குறைந்துள்ளன. இதற்கு சட்டவிரோத மரம் வெட்டுதலும் புதிய மரங்களை வளர்க்காததுமே முக்கிய காரணம் ஆகும்.

பிலிப்பைன்ஸ் நட்டில் ஆரம்பப்பள்ளியில் இருந்து ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பேர் படிப்பை முடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் உயர்நிலை பள்ளிப்படிப்பையும் 5 லட்சம் பேர் கல்லூரி படிப்பையும் முடிக்கின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் படிப்பை முடிக்கும் முன்பு தலா 10 மரங்களை நட வேண்டும் என்னும் சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு சார்பில் நடப்பட்ட 52,500 கோடி மரங்களில் 10% மட்டுமே தற்போது உள்ளன. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சுமார் 17.5 கோடி மரங்கள் நடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே இந்த மசோதா சட்டமாக வேண்டும் என பிலிப்பைன்ஸ் மக்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article